Tamil and Bhakthi are two sides of Tamil Nadu. In Tamil Nadu, in Tiruvarur district, Needamangalam Taluk, Kovil Venni temple is situated. In olden days, this place is known as “Thiru Venniyur”. It is 102nd Padal Petra Stalam ( Shaiva Saints sang Thevaram on Shiva) on the South bank of River Cauvery.
5000 years ago, this place was a dense Sugarcane forest. Once Musukunda Chakravarthy with his men was crossing Venni, after his prayers to Sri Thyagaraja Swamy in Tiruvarur. He happened to hear arguments between two Maharishis. One was mentioning the Stalavriksham ( Temple tree) is Karumbu ( Sugarcane, whereas the other one was mentioning as Venni Nandhiyavartham). Musukundha was surprised and asked them that there was no temple nearby and why they are arguing about Stalavriksham.
Swamy delivered an Asariree ( Invicible Voice) mentioning that Venni is the Stalavriksham. Musukunda was surprised and cleaned up the Sugarcane forest to find a Swayambu Lingam – Sri Venni Karumbeeswarar! He built a temple and offered prayers to Sri Venni Karumbeeswarar Later Karikala Chola won other Tamil kings at Venni battle and performed Thirupani to this temple.
Devi Sri Soundaranayaki is fondly called as Azhagiyanayaki. For a trouble free delivery, women keep 16 bangles collected from Valai Kaappu ritual ( Baby Shower) to Devi;s feet and perform Puja. They were blessed with Safe and happy child birth. Swamy is also known as Sri Ikshupureeswarar and Thiruvenni Mahadevar.
தமிழும் பக்தியும் தழைக்கும் தமிழகத்தில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் கோவில் வெண்ணி திருக்கோவில் அமைந்துள்ளது. முற்காலத்தில், இந்த திருத்தலம் , திருவெண்ணியூர் என அழைக்கப் பெற்றது. இத்திருத்தலம் காவிரி தென்கரையில் 102வது பாடல் பெற்ற திருத்தலமாகும். பழங்காலத்தில் இந்த தளம், அடர்ந்த கரும்புக்கு காடாக இருந்தது.
தமிழும் பக்தியும் தழைக்கும் தமிழகத்தில், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்தில் கோவில் வெண்ணி திருக்கோவில் அமைந்துள்ளது. முற்காலத்தில், இந்த திருத்தலம் , திருவெண்ணியூர் என அழைக்கப் பெற்றது. இத்திருத்தலம் காவிரி தென்கரையில் 102வது பாடல் பெற்ற திருத்தலமாகும். பழங்காலத்தில் இந்த தளம், அடர்ந்த கரும்புக்கு காடாக இருந்தது.
கரிகால சோழனும் வெண்ணி போரில், மற்றைய தமிழ் வேந்தர்களை வென்று , வெற்றி பெற்றதற்காக கோவில் திருப்பணிகள் செய்தார். ஞான சம்பந்தரும், அப்பரும் இந்த தலத்தில் பதிகங்கள் அருளி உள்ளனர். சுந்தரர் க்ஷேத்திரக் கோவையில் இந்த தலத்து ஈசனை, அரு மருந்தே என அழைத்து, இந்த இறைவன் பிணி தீர்க்கும் மருத்துவனாக திகழ்கிறான் என்கிறார். இப்போதும் வெண்ணி கரும்பீசரை இங்கு வந்து தொழும் அடியார்க்கு சர்க்கரை நோய் தீர்த்து வருகிறார் என்பது கண்கூடு
அம்பாள் சௌந்தரநாயகி, அழகிய நாயகி என்றும் அழைக்கப் படுகிறார். தலைப்பு பிரசவம் சுகப் பிரசவமாக, தாய்மார்கள், 16 வளைகளை அம்பாளுக்கு வளைகாப்பு சமயத்தில் சார்த்தி வழிபட்டால், சுகப் பிரசவம் நிகழ்வது இன்றும் நடக்கிறது.
சூரிய பகவான், பங்குனி 2,3,4 நாள்களில் ஸ்வாமி திருமேனி மேல் படிந்து சூரிய பூஜை செய்கிறார். இக்கோவில் கும்பாபிஷேக திருப்பணி இப்போது நடை பெறுகிறது.